இந்தியாவின் இரும்பு பெண்- 300 ஆண்கள்


தன்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன் அசத்தி காட்டிய இந்தியாவின் இரும்பு பெண்..

பெண்கள் என்றாலே வீக்கர் செக்ஸ் என்ற வார்த்தை நமது சமூகத்தில் புழக்கத்தில் உள்ளது. அறிவாளியாக இருந்தாலும், தலைமை பதவி வகித்தாலும் கூட அவர்களை சில வார்த்தைகளால் கூனிக்குறுகிட செய்ய சற்றும் தயங்காது ஆண் சமூகம். இது போன்ற பல சூழல்களை கடந்து தான் நமது வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இது போன்று தன் அழகை கிண்டல் செய்து அசிங்கமானவள் என ஏளனம் செய்தவர்கள் முன்னர் யாஸ்மீன் மானக் இரும்பு பெண்மணியாக மாறி மிரளவைத்துள்ளார்.

பல முகம் கொண்ட யாஸ்மீன்! தொழிலதிபர், ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர், பாடி பில்டர், பைக்கர் என தனது அழகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் யாஸ்மீன் மானக்.

வெண்கல பதக்கம்! சமீபத்தில் மிஸ்.ஆசியா பாடி பில்டிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளார் யாஸ்மீன் மானக்.

மிஸ். இந்தியா - 2016! மேலும், யாஸ்மீன் மானக் 2016-ஆம் வருடம் பாடி பில்டிங் ஃபெடரேஷன் நடத்திய மிஸ் இந்தியா 2016 போட்டியிலும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து! மிஸ் இந்தியா வரை யாஸ்மீன் மானக் ஆனது ஒரு விபத்து தான். சிறுவயதில் யாஸ்மீன் மானக் எடுத்துக் கொண்ட ஒரு தவறான மருந்து அவரை உடல் ரீதியாக, உடல் தோற்றம் ரீதியாக முற்றிலுமாக மாற்றியது. இவர் ஓர் ஆண் போன்ற உடல் வடிவம் கொண்டார். இதனால் வாழ்க்கையில் பல இடங்களில் இவர் அவ பேச்சுக்களை கேட்கும் நிலை உண்டானது.

அசிங்கம்! அசிங்கம் என கூறி இவரை ஏளனம் செய்ய துவங்கினர். இதனால் தன்னம்பிக்கை இழந்த யாஸ்மீன் மீண்டும் தன்னம்பிக்கை பெற ஜிம் செல்ல ஆரம்பித்தார். கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டார். மெல்ல, மெல்ல இவரது ஆர்வம் பாடி பில்டிங்கில் அதிகரித்தது.

300 ஆண்கள்! பாடி பில்டிங்கில் சாதித்தது மட்டுமின்றி, சொந்தமாக ஒரு ஜிம்மும் நடத்தி வருகிறார் யாஸ்மீன் மானக். ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் யாஸ்மீன் மானக்.