கலாச்சார துறைக்கு புதிய டி.வி.சேனல்... மத்திய அரசு திட்டம்


கலாச்சார துறைக்கு புதிய டி.வி.சேனல்... மத்திய அரசு திட்டம்!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு, நாட்டின் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டில் உள்ள பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கு நிதி உதவி அளித்துவருகிறது. இந்நிலையில் கலாச்சார துறைக்கு தனியாக சிறப்பு சேனல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மக்களுக்கு பாரம்பரிய கலாச்சாரங்களைக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தப் புதிய சேனல் தொடங்கப்பட உள்ளது. இந்த கலாச்சார சேனலில் நேரடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேர சேனல் தொடங்குவது தொடர்பாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்திவருகிறது. 

இதனைத் தொடர்ந்து கலாச்சாரத் துறைக்கான இந்த சிறப்புச் சேனல் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிகிறது. அப்படி புதிய சேனல் தொடங்கினால் அதற்கு  'DD Sanskriti'  என பெயரிடலாம் என அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுகிறது.