டாட்டா குழுமத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி ராஜினாமா


டாட்டா குழுமத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி ராஜினாமா

டெல்லி: டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பொறுப்பில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி இன்று முழுவதுமாக ராஜினாமா செய்துள்ளார். 2012ல் டாடா சன்ஸ் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி, கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் ரத்தன் டாடா அப்பொறுப்பை தாற்காலிகமாக ஏற்றார். அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, ரத்தன் டாடா மீது சைரஸ் மிஸ்திரி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார். இதனிடையே, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விரைவில் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பொறுப்பில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் சட்ட விரோதமாக பதவி பறிக்கப்பட்டதாக டாட்டா குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.