மும்பை தாக்குதல் போல் மற்றொரு தாக்குதல் நடத்த சதி, உளவுத்துறை எச்சரிக்கை


டெல்லி: மும்பை தாக்குதல் போல் மற்றொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து மற்றொரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் உஷார் நிலை
ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு, கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். குறிப்பாக, ஜம்முவில் இருந்து வரும் ரயில்களில் சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை சர்ச்கேட் ரயில் நிலைய காவல்படை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை கடிதம்
இதே போன்று, வடோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களின் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.மும்பை தாக்குதல்
இதற்கு முன்னர், 2008-ம் ஆண்டு நவம்பர், 26-ந் தேதி, கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் சதித்திட்டம்
இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது.இரண்டு சதித்திட்டம்
தீவிரவாத அமைப்புகள் குறிப்பிட்ட ஒரு திட்டத்தை மட்டும் தீட்டாமல், இரண்டு மூன்று திட்டங்களை தீட்டி வைத்துள்ளனர் என்றும், அதை ஒவ்வொன்றாக செயல்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு திட்டம் தோல்வி அடைந்தாலும் கூட மற்ற திட்டங்களை அடுத்தடுத்து அரங்கேற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.