இணையவழி தாக்குதல்


தற்போதைய இணையவழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வைரஸின் பெயர் ரான்சம்வேர். இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம். ரான்சம்வேர் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கணினி நச்சு நிரலாகும். பிணையைக் கொடுக்காவிட்டால், நம்மிடம் உள்ள கோப்புகளை அழித்துவிடவோ, ரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ செய்யும். கணினிகளை திடீரென அணைக்கவும் ரான்சம்வேரால் முடியும். கோப்புகளுக்கு பாதுகாப்பான காப்பி வைத்திருப்பதே இதைத் தடுக்க எளிமையான வழி. பெயர் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து பின்வரும் பெயருடனோ, அல்லது இவற்றைப் போன்ற பெயருடனோ ஏதேனும் அட்டாச்மெண்ட் வந்தால் அதனை திறந்து பார்க்க வேண்டாம்: qeriuwjhrf mssecsvc.exe cliconfg.exe diskpart.exe lhdfrgui.exe b9c5.bin 2C41DD.dat waitfor.exe tasksche.exe diskpart.exe