கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்


கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
     கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் எதிர்வரும் 15.08.2017 அன்று மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சுதந்திரதினவிழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
     இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்தி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை தயார்நிலையில் வைத்திடவும் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விளையாட்டு துறையினர்க்கு ஆலோசனை வழஙகினார்.
   பள்ளி மாணவமாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் நிகழ்சிகளை சீரமைத்து வழிநடத்திட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,காவல் துறையினர் மற்றம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்க்கு ஆலோசனை வழங்கினார்.
   விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திறக்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும் உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களை அமைத்திடவும் தீயணைப்பு மற்றும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்தினார்.
  விழா நடைபெறும் மைதானத்திற்க்கு பொதுமக்கள் பள்ளி மாணவ மாணயிவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பேரூந்து நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பேருந்துகள் கூடுதல் நடை இயக்கிடவும் போக்குவரத்துத் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். 
மைதானத்தில் பூந்தொட்டிகள் அமைத்தல், தேசிய தலைவர்களின் சிலைகளை அழகுப்படுத்தி பராமரித்தல், மும்முனை மின்சாரம் வழங்குதல் ஆகியபணிகளை உரிய துறையினர் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.