பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.அவர்களின் நுற்றாண்டு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மருத்துவ மு


     பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நுற்றாண்டு விழா கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 04.10.2017 நடைபெற உள்ளது.  இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த  திட்டமிடப்பட்டு  இன்று (17.07.2017)அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்  அனைவருக்கும் இடைநிலை கல்வித்  திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ் இ.ஆ.ப.அவர்கள் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

           இந்கிழ்ச்சியில் மாவட்டஆட்சியர் தெரிவித்தாவது,

கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் இன்று (17.07.2017) கரூர் ஒன்றியத்திற்கு புனித்தெரசா உதவி தொடக்கப்பள்ளியிலும், 18.07.2017 அன்று தாந்தோணி  ஒன்றியத்திற்கு கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 19.07.2017 அன்று அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளி அரவாக்குறிச்சியிலும், 20.07.2017 அன்று கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு இலாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21.07.2017  அன்று  கடவூர்  ஒன்றியத்திற்கு தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24.07.2017 அன்று க.பரமத்தி ஒன்றியத்தற்கு அரசு மேல்நிலைப்பள்ளி க.பரமத்திலும், 25.07.2017 அன்று குளித்தலை ஒன்றியத்திற்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தோகமலை ஒன்றியத்திற்கு தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.  இம்மருத்துவ முகாம்களில் 6 முதல் 18 வயதுடைய  மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கு காது, பார்வை, உடல் இயக்க குறைபாடு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை வழங்கப்படவுள்ளது.  இதனை கரூர்  மாவட்டத்தை சாந்த மாற்றுதிறனாளி குழந்தைகள் , மாணவ மாணவியர் பயன்பெறாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.