அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்


அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்...!


🌞 சு+ரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும் சு+ரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை 'அக்னி". அதனால் இந்த நட்சத்திரத்தில் சு+ரியன் சஞ்சரிக்கும் நேரமானது அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சு+ரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சு+ரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்று அழைப்பார்கள்.

🌞 அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். அக்னி நட்சத்திர தாக்கத்தில் இருந்து நம்மை காக்க என்ன செய்யலாம்.

அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம் :

🌞 அக்னி நட்சத்திர நாட்களில் சிவாலயங்களில் தாரா அபிஷேகம் செய்வது நல்லது.

🌞 தாரா பாத்திரம் என்ற பாத்திரத்தை சிவலிங்கத்தின்மேல் தொங்கவிட்டு, இடைவிடாமல் நீர் விழவைப்பதே தாரா அபிஷேகம். இந்நாட்களில் அதிகாலைத் துயிலெழுந்து, நீராடி சு+ரிய பு+ஜை செய்யலாம். சு+ரிய நமஸ்காரம் செய்வதும் நல்லது.

🌞 சித்திரை மாதத்தில் குடை, விசிறி, பாதரட்சைகள் தானம் செய்யலாம். 

🌞 அன்னதானம், பானகதானம், தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் தருவது போன்றவை செய்யலாம்.

🌞 இந்த கோடை வெயிலின் அக்னி காற்று நோயைப் பரப்பும். அதனால் தினம் குடத்தில் மஞ்சள் நீர் கரைத்து அதில் வேப்பிலையை நனைத்து வீடு முழுதும் தௌpக்கலாம்.

🌞 அம்மனுக்கு மிகவும் உகந்த வேப்பிலை குளிர்ச்சி மிக்கது. இளநீர், தர்பு+சணி, நீர் மோர் ஆகியவை உடல் சு+ட்டைத் தணிக்க உதவும்.

🌞 சித்திரை வெயிலிலிருந்துவிடுபட மகாவிஷ்ணுவைச் சாந்தப்படுத்த வேண்டும். அதேபோல் அம்மனையும் குளிரச் செய்ய வேண்டும்.

🌞 பால், தயிர், இளநீர், வேப்பிலை கலந்த மஞ்சள் நீர் அக்னி தேவனின் வெம்மையைக் குறைக்க உதவும்; அதேசமயம் அம்மனின் அருளும் கிட்டும்.

🌞 இந்த அக்னி நட்சத்திர நாளில் தினமும் தலைக்குக் குளித்து, பின் தயிர் சாதம், நீர் மோர், பானகம் மற்றும் நம்மால் இயன்ற நிவேதனப் பொருட்களை மகாவிஷ்ணுவிற்குப் படைத்துவிட்டு, அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கலாம். நாராயண மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து அன்னதானம் செய்யலாம். 

🌞 மாரியம்மனை குளிர்விக்கும் சீதாஷ்டக சுலோகத்தைப் பாராயணம் செய்யலாம். இதை குழுவாகவும் பிரார்த்தனை செய்யலாம்.

🌞 அக்னி நட்சத்திரத்தின் வெம்மை நம்மைத் தக்காமல் இருக்க, தினமும் காலை வேளையில், பு+ஜையறையில் சு+ரியனுக்கு உரிய மாக்கோலத்தை மணைப் பலகையில் போட்டு, சு+ரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

🌞 வெயில் சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வசதி உள்ளவர்கள் எளியவர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தலில் மோர், பானகம் போன்றவைகளை வழங்குவதன் மூலம் கோடிப் புண்ணியம் பெறலாம்.