அரசுபேருந்து விபத்துக்குள்ளனது


கரூர் அருகே அரசுப்பேருந்து புளியமரத்தில் மோதி விபத்து – நடத்துநர் உள்ளிட்ட 2 பேர் பலி – 32 பேர் படுகாயம் ஊட்டியிலிருந்து கரூர் மார்க்கமாக திருச்சி சென்ற அரசுப்பேருந்து கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியில் உள்ள மொடக்குச்சாலையை கடக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள புளியமரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் நடத்துனர் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சுமார் 35 க்கும் மேற்பட்டவர்களை கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அசோக் ஆறுமுகம் என்ற தஞ்சையை சார்ந்த பயணி, சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிகிச்சை முடிந்த பயணிகளை தனது சொந்த காரில் ஏற்றி பேருந்து நிலையம் அனுப்பி அந்த பயணிகளை ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். மேலும் விபத்து பகுதியினையும் நேரில் பார்வையிட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விபத்திற்கான காரணத்தையும் ஆய்வு செய்தார்.