இந்திய பள்ளிகளுக்கான தேசிய தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி


பதக்கம் வென்று சாதனை பள்ளிகள் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய பள்ளிகளுக்கான தேசிய தடகளப் போட்டியானது கடந்த பிப்ரவரி மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா , பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஹரியானா, கர்நாடகம், உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா ஆகிய 14 மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டது. நம் தமிழக அணியிலிருந்து 28 வீரர்கள் கலந்து கொண்டனர், அதில் கரூர் மாவட்டத்தில் இருந்து மாநிலப் போட்டிகளில் பதக்கம் வென்று தேசியப் போட்டிக்கு கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் M.G. நிவேதிகா 600 மீ ஓட்டப்போட்டியில் 1 நிமிடம் 44 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 16 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் V. கரீனா நல்லி நீளம் தாண்டுதலில் 5.17 மீ தூரம் தாண்டி தங்கப்பதக்கமும், MEDLEY RELAY போட்டியில் தமிழக அணி சார்பில் 16 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் V. கரீனா நல்லி கலந்து கொண்டு 2 நிமிடம் 24 விநாடிகளில் கடந்து தமிழக அணிக்கு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், மாவட்டத்திற்கும் மற்றும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த தங்கமங்கைகளை பள்ளியின் தாளாளர் திரு. ஆர்த்தி. R. சாமிநாதன் அவர்களும், பள்ளியின் ஆலோசகர் திரு. P. பழனியப்பன் அவர்களும், பள்ளியின் முதல்வர் திரு. D. பிரகாசம் --அவர்களும், ஆசிரிய, ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் பாராட்டினார்கள்.