சந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்


சந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

★ நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சந்திர பகவான். ஜாதக ரீதியாக ஒருவருக்கு சந்திர தசா புத்தி நடைபெறும் காலத்தில் பல்வேறு விநோதமான பலன்கள் தருகிறார்.

★ ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கு காரகன்.

★ பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம், துணிவு உண்டாகும்.

★ சந்திர பகவானின் திசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான

★ மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலத்தை உண்டாக்குவார்.

★ ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார்.

★ மிதுனத்திற்கு 2ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார்.

★ கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும்.

★ சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சு+ரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் திசையில் அடையலாம்.

★ கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதி சந்திரன் என்பதால் சந்திர திசை சாதகமான பலன்களையே தரும்.

★ துலா லக்னத்திற்கு 10ம் அதிபதி சந்திரன் திசை நடைபெறும் போது தொழில் ரீதியாக அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

★ விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் அனுகூலப்பலனை தரமாட்டார்.

★ தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் சாதகமாக அமையப் பெற்றால் மட்டுமே நற்பலனை கொடுப்பார்.

★ மகர லக்னத்திற்கு சந்திரன் 7ம் அதிபதி என்பதால் ஏற்றத் தாழ்வினை தருவார்.

★ கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும்.

★ மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.