கத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu

12/23/2016 சமையல்

கத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu

தேவையான பொருள்கள்
நறுக்கிய  சின்ன வெங்காயம் -  10 
பூண்டு - 15 பல்
கத்தரிக்காய் வற்றல்  -  10 
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் -  கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லி தூள்  - 2  ஸ்பூன்
மிளகாய் தூள்  -  1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்

செய்முறை

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்   கருவேப்பிலை  போட்டு தாளித்து  கத்தரிக்காய் வற்றல்     பூண்டு  போட்டு வதக்கி, அதனுடன்  வெங்காயத்தையும் சேர்த்து  வதக்கவும். 

பின்  அதனுடன்  அனைத்து தூள்களையும்   சேர்த்து வதக்கி புளியை கரைத்து  ஊற்றி  ,  தேவையான அளவு   உப்பு,   சேர்த்து நன்கு கொதித்து   எண்ணெய்  மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவைாயன  கத்தரிக்காய்  வற்றல்  குழம்பு ரெடி