வீடு கட்டும் ரோபோ!


வீடு கட்டும் ரோபோ!
கட்டடம் கட்டும் ரோபோக்கள் பல பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி., ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், யார் உதவியும் இல்லாமல், ஒரு முழு வீட்டைக் கட்டும் திறனுள்ள ரோபோவை உருவாக்கியுள்ளனர்.'டிஜிட்டல் கன்ஸ்ட்ரக் ஷன் பிளாட்பார்ம்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சக்கரங்களைப் பயன்படுத்தி நகர்கிறது. இதன் நீண்ட உலோகக் கரம், எல்லா திசைகளிலும் திரும்பும் லாவகம் கொண்டது. இந்த உலோகக் கரத்தின் நுனியில் தேவைக்கேற்ப கருவிகளை மாட்டிக்கொள்ளலாம். இந்த கருவிகள் சிமென்ட், மணல், பனித் துகள், மரச் சிராய்ப்புகள் என, பல கட்டடப் பொருட்களைக் கையாளும் திறன் கொண்டவை. கட்டடத்திற்கான வரைபடத்தை வைத்து, 
அவற்றுக்கு வேண்டிய பொருட்களை இந்த ரோபோ வாகனத்தில் வைத்துவிட்டால், ரோபோவே ராப்பகலாக உழைத்து முழு வீட்டைக் கட்டித் தந்துவிடும்.