ஆதிக்கமான இராசிகளின் விளக்கம்!


ஆதிக்கமான இராசிகளின் விளக்கம்! 


 ஆதிக்க உணர்வு என்பது மற்றவர்கள் தனக்கு கீழ்ப்படிந்து நடப்பதை காட்டுகின்றது. இதில் தன் தகுதி, தராதரம், மதிப்பு, மரியாதை முதலியவற்றில் முதன்மைபடுத்திக் கொண்டு அதன் கீழ் மற்றவர்களை ஆதிக்கம் கொள்வதை குறிப்பிடுகின்றது. மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு இராசிகள் முதன்மை பெற்று விளங்குகின்றன. 

மேஷம் :

🌀 எதிலும் தனித்தன்மை கொண்டு தன்னை முதன்மைப்படுத்துவதில் ஆதிக்கம் செலுத்தும். கீழ்ப்படியாமை என்பது இதன் ரத்தத்தில் ஊறிய விஷம். கோபமும் உண்டு, வேகமும் உண்டு. கட்டுப்படுத்துதல் என்ற ஆதிக்க உணர்வு அதிகமாக இருக்கும். 

மிதுனம் :

🌀 சிந்தனையின் செயல்பாட்டால் இயக்கும் தன்மை கொண்டது. ஆலோசனையை ஏற்காது. தன் சிந்தனையை ஆதிக்கத்துடன் அதிகாரத்துடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 

கடகம் :

🌀 இது சு+ழ்ச்சி வழியில் தன்னை முதன்மை படுத்தி முன்நின்று அரவணைப்பு என்கின்ற ஆயுதத்தால் ஆதிக்கத்தைச் செலுத்தும். அதே நேரம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தன் ஆதிக்கத்தை செலுத்தும். 

சிம்மம் :

🌀 இதன் நடை, உடை, பாவனை அனைத்தும் மற்றவர்களில் இருந்து மாறுபடுத்திக் கொண்டாலும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணம் கொண்டது. மறைத்து வைக்கத் தெரியாது. எதிர்ப்போரை முழுப்பலத்துடனும் தனக்கு கீழ் படிய வைக்கும் குணம் கொண்டது. தகுதியே சிறந்த போதிலும் தலை வணங்காது மற்றவர்களை தனக்கு கீழ் நினைப்பது இதன் தனிக்குணமாக விளங்குவதால் காலம் சாதகமாயில்லாதபோதும் கூட தன்னிடம் இருப்பதை இழக்கும் ஆனால் ஆதிக்க உணர்வை இழக்காது. 

விருச்சிகம் :

🌀 கூர்மையான அறிவின் மூலம் தன் வெளிப்பாட்டை கொணர்ந்து மற்றவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். கீழ்ப்படிந்தோரையும் நம்பும் குணம் கிடையாது. தன் ஆதிக்க உணர்வால் மற்றவர்களின் உடமையை இழக்கச் செய்து அதில் அற்ப சுகம் தேடும் சுபபலம் இதற்கு உண்டு.

தனுசு :

🌀 நிமிர்ந்த நிலையிலிருந்து பின் வாங்காது. பொது வேலையை தன் தோரணையால், பேச்சால் தன் வசப்படுத்தி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்தும். இதனைப் பார்த்த மாத்திரத்தில் மற்றவர்கள் வணங்குவதும், அடங்கிப் போவதும் இயல்பான ஒன்று, ஆகையால் இது யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. தன் ஆதிக்கத்திற்குட்பட்ட நிலைகளை காக்கும் தன்மை கொண்டது.