நம்பியவரைக் காக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன்


நம்பியவரைக் காக்கும் நாடியம்மன்!

🌠 பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தஞ்சாவு+ர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோவிலாகும். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும் பக்தர்களின் உயிர்நாடியாக விளங்குவதாலும்தான் இவ்வம்மனை 'நாடியம்மன்" என்று அழைக்கிறார்கள். 

அம்மன் - நாடியம்மன் 

தல விருட்சம் - நாகலிங்க மரம்

ஊர் - பட்டுக்கோட்டை

மாவட்டம் - தஞ்சாவு+ர்

தல வரலாறு :

🌠 கி.பி. 1600, மராட்டியர் ஆண்டு வந்த போது இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். மழவராயர் ஒரு முறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்கக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட ஆரம்பிக்க, தன்னந்தனியே காட்டில் நிற்கும் அவளைக் காண அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார்.

🌠 அவ்வாறு ஓடும்போது, அம்மா ஓடாதே நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், என்று கூறியும் அவள் நிற்காமல் ஓடிச் சென்று மன்னரை நோக்கிப் புன்னகைத்தபடி, அருகில் உள்ள புதரில் மறைந்து விட்டாள். அவளுடைய புன்னகை மன்னரை சற்று யோசிக்க வைத்தது.

🌠 வேந்தன் தன்னுடன் வந்த ஜனங்களை புதர் அருகே பார்க்குமாறு கூற அங்கே ஓர் அழகான அம்மன் சிலை பளபளத்தது. அவர் மனமுருகி, தாயே நாடி வந்து எங்களை ஆட்கொண்டவளே, இந்த ஊர்மக்களையும், என் குலத்தையும் நோய் நொடி இடர்பாடின்றிக் காப்பாற்றம்மா, என்று வேண்டிக்கொண்டு அங்கு கோவிலை எழுப்பினார்.

தல பெருமை :

🌠 இந்த அம்மன் கோவில் வயல்வெளி, பெரிய குளம் சு+ழ்ந்திருக்க பெரிய பெரிய குதிரை சிலைகளோடு அழகாக காட்சி தருகிறது.

🌠 கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சு+லம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாக சுகாசனத்தில் அமர்ந்தவாறு காட்சி தருகிறாள் நாடியம்மன்.

பிரார்த்தனை :

🌠 பௌர்ணமி பு+ஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.

🌠 இங்கு, மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சணம் போன்றவற்றோடு தாழம்பு+ பாவாடை சார்த்துதல், வெண்ணெய் படையல் என்ற வித்தியாசமான நேர்த்திக் கடன்களும் வழக்கத்தில் உள்ளன.

திருவிழா :

🌠 இவ்வருடம் இவ்விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

🌠 ஏப்ரல்-4ஆம் தேதி உற்சவ மண்டபத்தில் மண்டகப்படி சிறப்பாக நடைபெறும். அதைத் தொடர்ந்து காமதேனு, யானை, அன்னம், பு+தம், சிம்மம், ரிஷபம், வெட்டுக் குதிரை ஆகிய வாகனங்களில் தினமும் அம்பிகை வீதி உலா வருவாள். இதில் ஏப்ரல்-9, சிம்ம வாகனத்தன்று வரகரசிமாலை போடுதல் சிறப்பாக நடைபெறும்.

இன்றைய வாசகர் பார்வை :


இதே போன்று நீங்களும் 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்கி உங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். 👉ஊடiஉம ர்நசந