மொத்தமாக தூக்கப்படுகிறது பிரதமர் மோடியால் இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி


நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5 ஆவது மற்றும் இறுதிப் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த தொடரை இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் வென்றது.

இது நியூசிலாந்தில் 15 வருடங்களுக்கு பிறகு அந்த அணிக்கு எதிராக பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்த நாட்டில் 5 போட்டிகளை நியூசிலாந்து தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் 6ஆம் தேதி முதல் டி-20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூரில் 2வது டி-20 போட்டி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அதே நாளில் பெங்களூருவில் நடைபெறும் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டி 24ம் தேதி பெங்களூருவில் நடப்பதற்கு பதிலாக 27ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.