கரூரில் நடைபெற்ற தொகுதி-11-A தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு


இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேரடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தொகுதி-11-யு தேர்வு இன்று (06.08.2017) நடைபெற்றது.  இப்போட்டித்தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 1035 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.  இவர்களுக்காக 28 தேர்வு மையங்கள் அமைத்து 502 தேர்வு அறைகள் மூலம் தேர்வு நடைபெற்றன. இத்தேர்வு பணியில் 5 மண்டல அலுவலர்கள். 5 பறக்கும் படை அலுவலர்கள்; 28  முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.  தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பேருந்துகளை நிறுத்திச்செல்லவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.  இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில 2707 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.