கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கரையில் கட்டப்பட்ட அம்மா பூங்கா திறப்புவிழா


கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கரையில் ரூபாய் 49.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்காவினை மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்து 162 பயணாளிகளுக்கு ரூ-44 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மறைந்த மாண்புமிகு முன்னால் முதல்வர் அம்மா அவர்களின் பெயரில் மாயனூர் காவிரிக்கரையில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் அருகே வெகுசிறப்பாக அமைந்துள்ளது. கரூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காகவும் ஆடி பெருக்கு விழா கொண்டாடுவதற்க்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கிளில் சுற்றுலா தலங்கள் உள்ளன. கரூர் மாவட்டத்திற்க்கு சுற்றுலா தலம் இல்லாத குறையை போக்கும் வகையில் இந்த பூங்கா அமைந்துள்ளது. பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு முழுவதும்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.எதிர்வரும் 04.10.2017 அன்று கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடபடவுள்ளன அதன் தொடக்கமாக இன்று அம்மா பூங்காவில் பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரில் சிறிய அளவிலான கலையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பூங்காவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.இப்பூங்காவிற்க்கு வரும் பொதுமக்கள் அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட்ட 22 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது பாராடடுக்குரியது என தெரிவித்தார்.