கரூர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்புவிழா


 
கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம்,வெள்ளியணையில் ரூ.46.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டிடத்தினையும், கடவூர் ஊராட்சி ஒன்றியம், காணியாளம்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கும், மஞ்சபுளிப்பட்டி, புதுவாடி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.160.77 லட்சம் மதிப்பில்  கூடுதல் வகுப்பறைகள் கட்ட கட்டுமான பணிகளையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட ஆட்சியத் தலைவர் திரு.கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (28.07.2017) புதிய கட்டட பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். 
மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, வெள்ளியணை பகுதியில் காவல் துறையினரின் பணிகளை சட்ட ரீதியாக தொய்வின்றி பணிகளை ஏதுவாக புதிய காவல் நிலையத்தினை நவீன வசதியுடன் கூடிய புதிய காவல் நிலையத்தை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்துள்ளார்கள். காவல்துறையினரின் சார்பாகவும், மாவட்ட மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காணியாளம்பட்டி தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும்;மஞ்சபுளியம்பட்டி,புதுவாடி, வீரராக்கியம் ஆகிய பகுதிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  நிதி ஒதுக்கச் செய்துள்ளார்கள். இதற்கான  கட்டுமான பணிகளுக்கு இன்று  பூமிபூஜையிட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உரிய காலத்தில்  பணிகளை முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு  விடப்படும் என தெரிவித்தார்.