தமிழ்நாடு சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள்


கரூரில் போதைப் பொருள்  நுண்ணறிவுப்பிரிவு  தமிழ்நாடு சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (11.7.2017) கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

      போதைப் பொருட்களினால் உடல் உபாதைகளும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படுகிறது. எச்.ஐ.வி., தொற்றுகள், இதயம், நுரையீரல். சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்பு உள்ளிட்ட உடல்கோளாறுகள் ஏற்படும். இத்தகைய கேடு விளைவிக்கும் தீமைதரும் போதை பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.  ஒவ்வொருவரும் இதன் தீமைகளை உணர்ந்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி போதை பொருட்கள் இல்லாத ஒரு சமூதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் கலால் திரு.சைபுதீன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.செந்தில் வட்டாட்சியர், திரு. சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.