கரூரில் உலகக் குருதிக் கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி


கரூரில் உலகக் குருதிக் கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்
             கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.கு. கோவிந்தராஜ் இ.ஆ.ப அவர்கள் இன்று  30.06.2017  கொடி அசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
             இப்பேரணியில் பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குமரன் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவஃமாணவியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். இம்மாணவர்கள் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியும் விழிப்புணர்வு முழக்கமிட்டு சென்றனர்.
            இப்பேரணி மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தின்னப்பா திரை அரங்கம் வழியாக, புதிய பேருந்து நிலையம், ஜவஹர் கடை வீதி நகராட்சி வழியாக பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்தது. 
             மேலும் கரூர் மாவட்ட ஆட்சிரகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு அரங்கில் 2016-2017 ஆண்டு அதிக முறை இரத்த தானம் வழங்கிய 6 கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கல்லூரியில் பயிலும் மாணவஃமாணவியாகளுக்கிடையே இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்பான தலைப்பில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவஃமாணவியாகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கியும் இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களை பார்வையிட்டார்.
          இந்நிகழ்ச்சியல் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்;டாட்சியர் திரு.ஜெ.பாலசுப்ரமணியன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.செந்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்;டுப்பாடு அலுவலர் மரு.ஆர்.சுமதி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.இரா.வசந்தி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின், மாவட்ட திட்;ட மேலாளர்(பொ) திருமதி.தி.ஜெனிபர் அருள் மேரி மற்றும் கரூர் மாவட்ட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.