மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த கூட்டம்


சமுதாய மாற்றங்கள் உருவாக்க கூடிய சிறப்பு மிக்க எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களும் விழாகோலம் பூனவேண்டும்என மாண்புமிகு மக்களவை துணை சபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை அவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் வேண்டுகோள்
கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பாரதரத்னா  டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின்;டு நூற்றாண்டு விழா  தமிழகமெங்கும் கொண்டாடபட்டு வருகிறது  கரூர் மாவட்டத்தில எதிர்வரும் 04.10.2017 அன்று விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மக்களவை துணை சபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ்.இ.ஆ.ப.ää அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் இன்று(15.07.2017) நடைபெற்றது. 
கூட்டத்தில் மாண்புமிகு மக்களவை துணை சபாநாயகர் அவர்கள் பேசியதாவதுääபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டடாட வேண்டுமென்பது மறைந்த முன்னால் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விருப்பம் ஆகும். அவர்  இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரின் வழியில் செயல்படும் இந்த அரசு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட அரசாணை வெளியிட்டு அதன்மூலம் மாவட்டங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு முதலாவதாக மதுரை மாவட்டத்தில் விழாவானது தொடங்கிவைக்கப்பட்டது.
நமது கரூர் மாவட்டத்தில்  வருகின்ற 04.10.2017 அன்று இவ்விழா சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. விழாவின் முக்கிய அமசமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டிபேச்சுப்போட்டிஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட வேண்டும். இதில் நூறு சதவீதம் மாணவமாவியர்கள் கலந்துகொள்ளும் வகையில் போட்டிகளை நடத்திட வேண்டும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தகூடிய இந்த நூற்றாண்டு விழாவானது ஒவ்வொரு குடிமக்களுக்கும் தாய் தந்தை பாசம் மற்றும் பண்பாடு கலாச்சாரத்தை ஊட்டக்கூடியதாக அமைய வேண்டும் இதற்க்கு அனைவரும் ஒன்றினைந்து செயல்படவேண்டும். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்புத்திட்டமான சத்துணவு திட்டத்தை அனைவரும் போற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள சத்துணவு மையங்களிலும் ஒரு நாள் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்து மாணவமாணவிகளுக்கு வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.