உங்களுக்கு தெரியுமா

03/28/2017 கல்வி

உங்களுக்கு தெரியுமா?

அட....அப்படியா!!

💧 குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.

💧 கோசி ஆறு பீகார் மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது.

💧 ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் கொல்கத்தா.

💧 பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்.

💧 சேவல்களால் அதன் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.

💧 நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றனவாம்.

💧 உலகிலேயே மிக அதிக விலை கொண்ட தனிமம் கலிபோர்னியம்.

💧 புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டென்னிசன் தன் 10 வயதிலேயே 6000 சொற்களை கொண்ட கவிதையை எழுதினார்.

💧 இந்தியாவின் முட்டைபாத்திரம் என்றழைக்கப்படுவது ஆந்திரா.

💧 உலகிலேயே மிக அதிகமாக உள்ள பறவை இனம் கோழி.

💧 இலையுதிர் காலங்களில் இலையை உதிற்காத மரம் ஊசி இலை மரம்.

💧 பள்ளி மற்றும் கல்லு}ரிகளில் நீச்சல் பாடத்தை அறிமுகப்படுத்திய நாடு அமெரிக்கா.

💧 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய பாலு}ட்டி இனமான பிலாடிபஸ், தனது எடையில் 20 சதவீத உணவை தினமும் சாப்பிடும்.

💧 கரப்பான் பு+ச்சியின் இதயம் 13 அறைகளை கொண்டது.

💧 பனி மூடிய ஆப்பிரிக்க மலை சிகரம் கிளிமஞ்சாரோ.