உலக இளைஞர் திறன் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

07/14/2017 கல்வி

கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற உலக இளைஞர் திறன் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் திறன் எய்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகள் ஆட்டோமொபைல், கட்டுமானம், இலகு பொறியியல் தொலைதொடர்பு, ஊடகம், விருந்தோம்பல், அழகுக்கலை, தோல் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், கால்நடைத்துறை, கனரக, இலகுரக வாகன ஓட்டுநர், ஜவுளி, வங்கி நிதி சேவை, சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், சில்லரை வர்த்தகம், மென்திறன் பயிற்சி, பட்டுபுழு வளர்த்தல், பிளாஸ்டிக்  மற்றும் இரசாயனத்துறை, மீன்வளத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய துறைகள் மூலம் இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் நாளொன்றுக்கு போக்குவரத்து செலவாக ரூ.100 வழங்கப்படுகிறது.