கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறுபான்மையினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை

07/06/2017 கல்வி

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட  அரங்கில்  மாவட்ட  ஆட்சித்தலைவர் 
கு.கோவிந்தராஜ்,இ.ஆ.ப.,  தலைமையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை சார்பில் கடன் மேளா இன்று (06.07.2017) நடைபெற்றது.

 இந்நிகழ்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
                தமிழ் நாட்டில் வாழும்  சிறுபான்மையின சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடன் உதவிகள் வழங்கும் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வருகிறது. இக்கடன் உதவிகளை  பெறுவதற்காக இன்றைய தினம் லோன் மேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் கடன்களை பெறுவதற்கான தகவல்கள், திட்டவாரியான விளக்கங்கள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், விண்ணப்பங்கள், விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்துவ , இஸ்லாமிய , சீக்கிய, புத்த  மத, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சார்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் உதவிகளை பெறலாம். இதில் தனி நபர் கடன் சுயஉதவிக்குழுக்கான சிறுகடன் உதவி திட்டம், கல்வி கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன் உள்ளிட்ட கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இக்கடன் உதவிகளை பெறுவதற்கு 18 வயது புர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மத்திய , நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு 2017-2018 ம் நிதியாண்டிற்கு ரூ. 3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி  விண்ணப்பங்கள் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.  இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று கரூர் மாவட்ட பொதுமக்கள்  பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  
              இம்முகாமில் 186 மனுக்கள் பெறப்பெற்று உடனடியாக பரிசிலிக்கப்பட்டு தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
               இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.சூர்யபிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சீனிவாசன், உதவி ஆணையர் கலால் திரு.சைபுதீன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.செந்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிர்பான்மையினர் திருமதி.கி.சாந்தி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரவிசந்திரன் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.