எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்


எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்?


✜ ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும்.

✜ கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம்.

எந்த கோவிலை சுற்றினால் பலன் :

❖ விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும்.

❖ முருக பெருமான் கோவிலில் ஆறு முறை வலம் வர வந்தால் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலும், கூர்ந்த மதியும் திறமையும் கிடைக்கும்.

❖ அம்பிகை பராசக்தியை வெள்ளி முதல் செவ்வாய் வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். மன அமைதி, வெற்றி கிட்டும்.

❖ சிவபெருமானை ஐந்து முறை வலம் வந்து வணங்கினால் மீண்டும் பிறவா நிலை, செல்வ வளம் கிடைக்கும்.

❖ திருமால் கோவிலில் மகாவிஷ்ணுவை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இதனால் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

❖ நவக்கிரக கோவில்களில் விக்ரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும். இதனால் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி, வாழ்க்கை பயனுள்ளதாக மாறும்.

➽ இதை தவிர்த்து பதினோரு முறை, பதிமூன்று முறை, நு}ற்றியொரு முறை, நு}ற்றியெட்டு முறை வலம் வருதல், அங்க பிரதட்சணம் போன்றவை அவரவர் வேண்டுதலை பொருத்தது.