அசத்தலான ஐடியாவுக்கு ரூ.12 லட்சம் பரிசு: ரயில்வே அறிவிப்பு


அசத்தலான ஐடியாவுக்கு ரூ.12 லட்சம் பரிசு: ரயில்வே அறிவிப்பு

புதிதாக ரயில் பெட்டி வடிவமைப்பதற்கு குறித்து வித்தியாசமான யோசனை கொடுப்பவர்களுக்கு சிறப்புப் பரிசை வழங்கும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலான பெட்டிகளை உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக ரயில் பெட்டிகளை வடிவமைக்கவும் ரயில்வே முடிவுசெய்துள்ளது.
இதற்காக, ரயில் பெட்டி வடிவமைப்புக்கு பொதுமக்கள் யோசனைகள் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஐடியாவைக் கொடுக்கும் 6 பேருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசளிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.