இன்னும் 100 நாட்களில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்


ஐசிசியின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளன.

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் போட்டியை ஜூன் மாதம் 5ம் தேதி விளையாடுகிறது. அந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்கிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியை ஜூன் 1ம் தேதி விளையாடுகிறது. அந்த போட்டியில் அந்த அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு முந்தைய தொடரில் விளையாட ஆயத்தமாகி உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பிறகு உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.