சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்

சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்


சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் 🚀 ரஷ்யாவைச் சேர்ந்த யு ரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் வஸ்டொக்-1 என்கிற விண்கலத்தின் மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி விண்வெளிக்குச் சென்று வந்தார். இவர் பு மியை 1 மணி நேரம் 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். 🚀 யு ரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஆம் தேதியை சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் 👫 வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் ஏப்ரல் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 👫 உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டாம் கிளான்ஸி  🏁 உலகப் புகழ்பெற்ற உளவுத்துறை சார்ந்த நு}ல்களைப் படைத்த டாம் கிளான்ஸி (வுழஅ ஊடயnஉல) 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்டி மோரில் பிறந்தார். இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி. 🏁 இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது, ஆனால் பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 🏁 அதைப் பற்றி பல புத்தகங்களைப் படித்தார். ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்" என்ற நாவல் 1982-ல் வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது. 🏁 உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி 66-வது வயதில் (2013) மறைந்தார். முக்கிய நிகழ்வுகள் 👉 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. ★ 1606ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 💉 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பு சி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.