சென்னையில் தி.நகரில் 2.65 டன் பிளாஸ்டிக் பறிமுதல்


சென்னை தி.நகரில் 2.65 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தனி குழு அமைக்கப்பட்டு, சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் அங்காடிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக சென்னை கலெக்டருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதில் தி.நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் 2.65 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.