ஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 303 ரக ரைபிள் துப்பாக்கி ஒன்று மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.