பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்


பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்: தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்..!

ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.
 
5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.
ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.

புதிய  விதி
புதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.

விளக்கம் அளிக்க நேரிடும்
5,000 ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் போது வங்கி அதிகாரிகள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். அதற்கு திருப்திகரமான பதிலை நீங்கள் அளிக்க வேண்டும்.

ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும்
வங்கி கணக்கில் 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை டெப்பாஸிட் செய்யும் போது உங்கள் கணக்கிற்கு சரியான அடையாளம் மற்றும், முகவரி சான்றிதழ்களை அளித்து இருந்தால் மட்டுமே டெப்பாசிட் செய்ய இயலும்.