பொருளாதார வல்லுநரை புதிய தேசிய வர்த்தக சபையின் தலைவராக நியமித்தார் டிரம்ப்


பொருளாதார வல்லுநரை புதிய தேசிய வர்த்தக சபையின் தலைவராக நியமித்தார் டிரம்ப்


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பொருளாதார வல்லுநரான பீட்டர் நவ்வாரோ புதிய தேசிய வர்த்தக அமைப்பின் தலைவராக நியமித்துள்ளார். சீனாவை வெளிப்படையாக விமர்சித்தவர் நவ்வாரோ என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையின் புதிய தேசிய வர்த்தக சபையை நவ்வாரோ வழிநடத்த உள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை கொள்கைகளின் இயக்குநராகவும் செயல்பட உள்ளார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்ட் டிரம்ப்புக்கு பீட்டர் நவ்வாரோ ஆலோசகராக செயல்பட்டார்.
அவருடையை புத்தகங்களான 'தி கமிங் சைனா வார்ஸ்' மற்றும் 'டெத் பை சைனா' போன்றவற்றில், சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார்.
தேர்தலின் போது, வர்த்தக பிரச்சினைகளை ஒரு முக்கிய மைய பிரச்சினையாக முன்வைத்த டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் மெக்ஸிக்கோ உடன் அமெரிக்க போட்ட ஒப்பந்தங்கள் குறித்து விமர்சித்திருந்தார்.