ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை


சென்னை: "உண்டியல் பத்திரமுங்க.. போலி பக்தர்கள் வரப்போறாங்க" என்ற எச்சரிக்கை தொணியில் முக ஸ்டாலினை நக்கல் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

கொஞ்ச நாளா இல்லாமல் இருந்த ட்விட்டர் மோதல் திரும்பவும் ஆரம்பிச்சாச்சு. இதனை ஆரம்பித்து வைத்திருப்பது தமிழிசைதான்.

சில தினங்களுக்கு முன்புவரை திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கும், தமிழிசைக்கும் தாமரை மலருமா, மலராதா என்பதில் ட்விட்டர் போர் நடந்து வந்தது. ஆனால் ஸ்டாலின் தனது கவனத்தை கமல் பக்கம் திருப்பவும் அந்த பரபரப்பு குறைந்திருந்தது.

திருமழிசையில் நேற்று நடந்த கூட்டத்தில் "கிராமங்கள்தான் கோயில், இந்த கோவிலை தேடி வந்துள்ள உண்மையான பக்தன்" என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு கமல் பக்கமிருந்து பதில் வரும் என்று பார்த்தால் மாறாக தமிழிசையிடமிருந்து கமெண்ட் வந்திருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'உண்டியல்கள் சிலைகள் பத்திரம். போலி பக்தர்கள் நடமாட்டம் .ஓர் எச்சரிக்கை நலன் கருதி" என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஊழல்வாதிகள் என்று அடிக்கு ஒரு பேச்சாக பேசி வரும் தமிழிசை, இப்போது உண்டியல், சிலைகளை கொள்ளை அடிப்பவர் என்ற ரீதியில் கிண்டல் செய்து மக்களின் நலனுக்காக எச்சரிக்கை விடுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இதற்கு இன்னும் ஸ்டாலினிடமிருந்து பதில் இல்லை... பார்ப்போம் வருகிறதா என்று