4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் - தனியார் வங்கிகள்


4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் - தனியார் வங்கிகள்

🏧 நாட்டில் உயர்பணமான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார்கள். தங்களின் அன்றாட தேவைகளுக்காக பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் வங்கிகள் முன்பும், ஏ.டி.எம்-கள் முன்பும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

🏧 பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு ஏ.டி.எம் மையங்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.

🏧 உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாகவும், பொது மக்களின் வசதிக்காக கடந்த 4 மாதங்களாக எந்த ஏ.டி.எம் மையங்களிலும் பணம் எடுப்பதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

🏧 இந்நிலையில் பண மதிப்பிழப்பு பிரச்சனை ஆனது தற்போது மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது.

🏧 அதன்படி ஒரு மாதத்திற்கு ஒரு தனிநபர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

🏧 அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஒவ்வொரு கணக்குக்கும் குறைந்த பட்ச தொகை வசூலிக்கப்பட உள்ளது. 4வது முறைக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் பணம் வசூலிக்கப்படும். 150 ரூபாய் வரை வசூலிக்கபடும் என்றும் அறிவித்துள்ளது.

🏧 இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன.

🏧 சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.