5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான்


காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதல் பிறகு இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கடந்த 27-ம் தேதி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன.

அப்போது இந்திய போர் விமானங்கள் உடனடியாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர்.அப்போது "மிக்-21" ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

"மிக்-21" ரக விமானத்தில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர். பின்பு கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

தாக்குதலின் காரணமாக இந்தியா , பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது விமானநிலையத்தை கடந்த புதன் கிழமை மூடியது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் விமான நிலையம் திறந்தது. என சிவில் போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.