30 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு இலவச சுடுநீர் : டீக்கடை வருவாயில் சமூக சேவை

08/19/2016 சேவை

30 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு இலவச சுடுநீர் : டீக்கடை வருவாயில் சமூக சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையில், ஒரு டீக்கடை முன் அதிகாலை நேரத்தில் தினமும் ஏகப்பட்ட கூட்டம். டீ வாங்கத்தான் இவ்வளவு கூட்டமா எனச் சென்று பார்த்தால், எல்லோரும் இலவசமாக அந்தக் கடையில் பாட்டில், பாட்டிலாக சுடுதண்ணீர் வாங்கிச் செல்கின்றனர். பேரல் பேரலாகக் கொண்டு வரப்படும் தண்ணீரை ஒரு ஊழியர் கேஸ் அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டிருக்க, மற்றொரு ஊழியர் அந்த சுடு தண்ணீரை வாளியில் வருகிறவர்களுக்கெல்லாம் இலவசமாக வழங்குகிறார்.