நீரை தேடும் நீண்ட பயணம்


நீரை தேடும் நீண்ட பயணம்

நிலத்தடி நீரை அறிய பாரம்பரிய அறிவியலில் பல வழிமுறைகள் உள்ளன. மனையின்
குறிப்பிட்ட இடத்தில் பசும்புற்கள் அதிகம் செழித்து வளர்ந்திருந்தால் அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாம். பால் சுரக்கும் பசுக்கள் எங்கே மேய்ந்தாலும் நிலத்தடி நீர் உள்ள இடத்தை
தேர்ந்தெடுத்து அமர்ந்து தான் அசை போடும். எறும்புகள் தானியங்களை கொண்டு வந்து சேமிக்கும் இடத்தில் நிலத்தடி நீர் அதிகம் இருக்குமாம். மருத மரம் உள்ள பகுதிகளில்
கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும். நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.