போக்குவரத்து துறை ஊழியர்கள் மீது எஸ் மா சட்டம் பாயும் மதுரை ஐகோர்ட் அதிரடி


பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வேலைக்கு திரும்பா விட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுளளது. தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேலை நிறுத்தத்திற்கு எதிராக செந்தில் குமாரய்யா என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊழியர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. அவர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் சேஷாயி மற்றும் முரளிதரன் அமர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை உடனடியாக ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். எஸ் மா சட்டம் என்றால் என்ன ? மக்களின் அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், போக்குவரத்து,தபால் போன்ற இதர துறைகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மக்களுக்கு இடையூறு ஏற்படுமாயின் எவ்வித முன் அறிவிப்புமின்றி கைது செய்யப்படுவர் அல்லது பணி நீக்கம் , அபராதம் விதிக்கப்படும்