சதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்!


சதுரங்க வேட்டை போன்று கதை தேடும் நட்டி நடராஜ்!

ஒளிப்பதிவாளரான நடராஜ் நாயகனாக நடித்த சதுரங்க வேட்டை படம் அவருக்கு முதல் மெகா ஹிட்டாக அமைந்தது. அதற்கு முன்பும், பின்பும் அவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியாக அமையவில்லை. தற்போது பிரேமம் புகழ் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ஒரு மலையாள படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்து வரும் நடராஜ், தமிழில் போங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும், சதுரங்க வேட்டை மாதிரி மீண்டும் ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நட்ராஜ்.

அதனால், சதுரங்க வேட்டை போன்று ஒரு விறுவிறுப்பான கதையை தேடிக்கொண்டிருக்கும் நடராஜ், புதிய சிந்தனைகளுடன் வரும் புதுமுக டைரக்டர்களை அழைத்து அவ்வப்போது கதை கேட்டும் வருகிறார். ஆனபோதும் அவர் எதிர்பார்க்கிற மாதிரியான விறுவிறுப்பான கதைகள் இன்னும் கிடைக்கவில்லையாம். அதேசமயம், சில புதுமுக டைரக்டர்களிடம் தனது எதிர்பார்ப்பை சொல்லி, கதை ரெடி பண்ணுமாறு கூறிவருகிறார்.