முடிஞ்சா இவன புடி


முடிஞ்சா இவன புடி "க்கு அதிக தியேட்டர்... 

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கன்னட நடிகர்  நான் ஈ சுதீப் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் - முடிஞ்சா இவன புடி. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மற்றும் பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், டெல்லி கணேஷ், முகேஷ் திவாரி, சாய் ரவி, அவினாஷ், சரத் லோகித்ஷவா முதலானோர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசை அமைத்துள்ளார். வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முடிஞ்சா இவன புடி படத்தை வாங்கி தமிழகம் முபக்க வெளியிட்டுள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தார். லிங்கா விவகாரத்தின் தொடர்ச்சியாக முடிஞ்சா இவன புடி' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி அதிக தியேட்டர்களில் படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில்  படம் வெளியாகி ஒருவார் கழித்து அதாவது நேற்றிலிருந்து கூடுதலாக 120 தியேட்டர்களில் முடிஞ்சா இவன புடி படத்தை திரையிட்டனர். இப்படி ஒரு முடிவை எடுத்த எஸ்கேப் மதனுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அதாவது இரண்டாவது வார வசூல் இரண்டுமடங்காகிவிட்டதாம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே தினம் வெளியான இப்படத்திற்கு கன்னடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.