அரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்

07/07/2017 கல்வி

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் பதிவு செய்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பள்ளி மாணவ-மாணவியர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கரூர் மாவட்டம் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ளியனை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி பெயர் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளி மாணவ,மாணவியர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம், தழிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளல் குறித்து 40 வகையான வினா தொகுப்பினை கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ,மாணவியர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கலந்துரையாடலின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
இந்திய ஜனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிப்பது தலையாய கடமையாகும் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பதற்கு ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி பெயர் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக கரூர் மாவட்டத்தில் ஜீலை 1 முதல் 31 ஆம் தேதிவரை சமந்தப்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பெயர் பதிவு செய்யலாம்.09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி 18 வயது நிறைவடைந்தவர்கள் விடுதலின்றி பெயர் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்மென கேட்டுக் கொண்டார்.