இன்றைய இராசிபலன்கள்


இன்றைய இராசிபலன்கள்!

♈ மேஷ ராசி 

பணிகளில் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

♉ ரிஷப ராசி

திட்டமிட்ட காரியம் நிறைவேற காலதாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். உத்யோகத்தில் வேலைமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்றைய தேவைகள் ஓரளவு பு ர்த்தியாகும்.

♊ மிதுன ராசி 

எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலம் வரவு அதிகரிக்கும். சிலருக்கு ஓரளவு கடன் பிரச்சனை அகலும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

♋ கடக ராசி

இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் நட்பு விரிவடையும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் சிறப்படையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.

♌ சிம்ம ராசி    

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற அறிகுறி தோன்றும். இன்று வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

♍ கன்னி ராசி    

இன்று நல்ல காரியத்தில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்கள், அடுத்தவர் பிரச்சனையில் கருத்து சொல்ல வேண்டாம்.

♎ துலாம் ராசி

சு ழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. சிலருக்கு வாகனப் பழுதுச் செலவுகள் உண்டாகும். உடல்நலத்தில் சிறு பிரச்சனை வந்து நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் மந்தமாக இருக்கும். இன்று எதிலும் பொறுமை தேவை.

♏ விருச்சக ராசி 

இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். 

♐ தனுசு ராசி

திட்டங்கள் நல்லபடியாக நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் உதவி மனதிற்கு தெம்பளிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு வருமானம் இருக்கும்.

♑ மகர ராசி

தொலை தூரத்துப் பயணத்தின் பொழுது எச்சரிக்கை தேவை. புத்திரர்களின் நற்செயல் பெருமை தேடித் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான வருமானம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

♒ கும்ப ராசி    

இன்று சிலருக்கு வீண் மனக்குழப்பம் உருவாகும். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி உங்களின் எண்ணங்களை செயல்படுத்துவார். எதிர்பார்த்த சுபசெய்தி வரும். பணவரத்து அதிகரிக்கும்.

♓ மீன ராசி

புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத் தேவை பு ர்த்தியாகும். வாகன பராமரிப்பு செலவுக் கூடும். புத்திரர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல்நிலை சுமாராக இருக்கும்.