கரூரில் உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் கருவினை வழங்கும் விழா

கரூரில் உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் கருவினை வழங்கும் விழா

07/26/2017 தொழில்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.07.2017) நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு,காவல்துறை நடவடிக்கை,புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 237 மனுக்கள் வரப்பெற்றன.  பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.