செல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்


செல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்

ஓவியரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஏ.பி.சேகர், சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் கேமரா மியூசியம் ஒன்றை துவக்கி உள்ளார். இதில் அவர் சேகரித்த சுமார் 4 ஆயிரம் கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. உலகின் நீளமான மம்மூத் கேமரா முதல் 11 கிராம் எடை கொண்ட சிறிய கேமரா வரை காட்சிக்கு வைத்துள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் முன்னிலையில் ஒளிப்பதிவளார் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:  விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக இப்போது எல்லோர் கையிலும் கேமரா செல்போன் வந்து விட்டது. எல்லோரும் கேமராமேன்கள் ஆகி படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நல்ல ஒளிப்பதிவாளராக அது பற்றி நிறைய படிக்க வேண்டும். அதற்கான நூல்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. அவைகள் தமிழிலும் வரவேண்டும்.

விஷூவல் மீடியா பற்றிய படிப்புக்கு ஆர்வம் இருக்கிறது. அதை படிப்பவர்கள் கேமராக்களின் வரலாற்றை படிக்க வேண்டும். நான் கேள்விப்பட்டிராத பல கேமராக்களை இந்த மியூசியத்தில் பார்த்தேன், வரலாறு மிகவும் முக்கியம். வரலாற்றை பதிவு செய்து வைப்பதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி. இந்த மியூசியம் இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டும். ஸ்ரீதர் இதோடு நின்று விடக்கூடாது இதன் அடுத்தகட்ட முயற்சிக்கு செல்ல வேண்டும். இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் பேசினார். 

வழாவில் விஞ்ஞானி இஸ்மாயில், வி.ஜி.சந்தோஷம், விஜிபி ரவிதாஸ், ராஜாதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.