தமிழ் நடிகர் சிம்பு.. வரலட்சுமி.. திருமணம் உறுதியானது….. விஷால் ரத்தக் கண்ணீர்..


‘தமிழ்’ நடிகர் சிம்பு.. வரலட்சுமி.. திருமணம் உறுதியானது…..!? விஷால் ரத்தக் கண்ணீர்..!?

விஷால் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி இருவரும் காதலித்தார்கள். ஆனால் விஷால் -சரத்குமார் நடிகர் சங்க மோதல் உண்டானதை அடுத்து ஒரு பதட்டமான சூழல் உருவானது.

ஆனாலும் வரலட்சுமி விஷாலை தொடர்ந்து காதலித்து வந்தார். ஆனால், நடிகர் சங்க தேர்தலுக்குப் பின்னும் சரத்குமாரை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தார் விஷால்.

மேலும் மேலும் அவரை அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார். பொறுத்து பொறுத்துப் பார்த்த வரலட்சுமி விஷாலை எச்சரித்தார்..!

ஆனால், அவர் கேட்பதாக இல்லை. இடையில் சரத்குமார் மிகவும் மனமுடைந்தார். கலங்கிப் போனார்.

வரலட்சுமி அப்பாவின் நிலை கண்டு அழுதே விட்டார்..! என்ன இருந்தாலும் அவர் அப்பா. காதலை தூக்கி எறிந்தார். விஷாலுக்கு குட் பை சொல்லி கழட்டிவிட்டார்.

அதே நேரம் தமிழ் நடிகன் சிம்புவையும் ஒழித்துக்  கட்டும் வேலைகளில் விஷால் தரப்பு இறங்கியது. மேலும் மேலும் சிம்பு படங்களுக்கு சிக்கல் உண்டாக்குவது,பெயரைக் கெடுப்பது போன்ற காரியங்கள் நடந்தது.

சிம்பு நிலைகுலைந்து போனார். சிம்புவின் நெருங்கிய தோழிகள் ஆறுதல் கூறி வந்தனர். இப்போது தான் ஒரு திருப்பம் நடந்தது. ஒரு விழாவிற்கு சிம்பு,திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கலந்து கொள்ள வரலட்சுமியும்  பார்ட்டியில் ஆஜர் ஆனார்.

ஏற்கனவே சிம்புவுடன் வரலட்சுமி ‘போடா போடி’ படத்தில் ஜோடியாக நடித்தார்.நல்ல நட்பு இருந்தது. அந்த பார்ட்டியில் இருவரும் மனம்  விட்டுப் பேசினார்கள். அவ்வளவுதான் நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் விஷால் தரப்பை கொதிக்க வைத்தது.கடும் ஆத்திரம் அடைந்தார்.

இப்போது  இருவர் வீட்டிலும் திருமணம் செய்து வைக்க  ஏற்பாடுகள் நடப்பதாக கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசுகிறது..! இந்த விஷயம் கேள்விப் பட்ட விஷால் கடும் சோகத்தில் ஆழ்ந்தார் என்றும் பேசப்படுகிறது..!

உண்மையாக இருந்தால் வாழ்த்துக்கள் ஜோடிகளே..!