10 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்


10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள `சிவலிங்கா', `மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.  இப்படத்தை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவா  லாரன்ஸ் நடித்ததுள்ள மற்றொரு படமான `சிவலிங்கா' படத்தையும் பிப்ரவரி 17-ம் தேதியே வெளியிடப்போவதாக  அப்படக்குழுவினர்அறிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னதாக 1998-ல்  கார்த்திக்கின் `உள்ளத்தை அள்ளி தா', `கிழக்கு மலை' ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகியது. பின்னர் சமீபத்தில் பரத்  நடிப்பில் `வெயில்', `சென்னை காதல்' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது. 

இவ்வாறு ஒரே நாளில் ரிலீசாகும் படங்களில் ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்ற வரலாறு இருக்கும் நிலையில், இவ்விரு  படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்   கடைசி நேரத்தில் இந்த இருபடங்களில் ஏதாவது ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.