கரூரில் தேசிய நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி

08/10/2017 தொழில்

நலிவடைந்த நெசவாளர்களின் வாழ்ககை தரத்ததை மேம்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதிலுமுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள்,வேட்டிகள்,படுக்ககை விரிப்புகள்,திரை சீலைகள், துண்டுகள்,போர்வைகள்,கைலிகள் உள்ளிட்டவை புதிய ரகங்களிலும் வடிவிலும்,மேம்பட்ட தரத்திலும் சிறப்பு வண்ணங்களிலும் காட்சிக்கு வைத்தள்ளனர்.
கரூர் மாவட்டத்திற்கு ரூ-20 இலட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் கரூர் சரகத்தில் உள்ள நெசவாள்ர்களின் தொழிலை மேம்படுத்த பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைந்நு தலா ரூ-50,000 கடனுதவியும் வழங்கப்படுகிறது.இந்த கடனுதவி பெறும் நெசவாளர்கள் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தி தங்கள் வாழ்வில்  வளர்ச்சி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும்,கரூர் மாவட்ட பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை பெருமளவு வாங்கி பயண்படுத்தி நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றத்ததை உண்டாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.