பீகாருக்கு எதிரான முஸ்தாக் அலி கோப்பை : 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி


சூரத்:

பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி நேற்று சூரத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பீகார் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த பீகார் அணி9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தமிழக அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.