டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை


ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை நவோமி ஒசாகா பெற்றுள்ளார்.

மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஒப்பானின் நவோமி ஒசாகா வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும் இவரை எதிர்த்து இறுதிச்சுற்றில் விளையாடிய பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.